புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பி.அசோகன் தலைமை வகித்தார். 35 ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டனர்.அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது . அனைவரையும் முதுகலை அறிவியல் ஆசிரியர் இளங்கோ வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆரோக்கியசாமி, துணை ஆளுநர்
ஆர்.ஜெயக்குமார், சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், கல்வி குழு தலைவர் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, நகர்மன்ற உறுப்பினர் ஜெ.ராஜா முஹம்மது, சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா வாழ்த்துரை வழங்கினார்கள். புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் மா.மஞ்சுளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்க
ளுக்கும் சங்கத் தலைவர் இனிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.