புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83). வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
ரா
ணி ரமாதேவிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானின் மாமியார் ராணி ரமாதேவி ஆவார். 3.3.1948ல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.