தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ,புதுகை நகர கிளை1,2, அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, வெட்டிவயல்,கோட்டைபட்டினம், அம்மாபட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிப்பட்டிணம் முக்கண்ணாமலைப்பட்டி அன்னவாசல் கிளைகள் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் , குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்றினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 23 இடங்களில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள் ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருந்து இன்றைய தினம் ஈதுல் ஃபித்ரு எனப்படும் ஈகைத்திருநாளை கொண்டாடி வருகிறோம், ஏழைகளும்
பசியின்றி இப்பண்டிகையை சந்தோசத்தோடு கொண்டாட வேண்டி தொழுகைக்கு முன்னரே பெருநாளுக்கான தர்மமாகிய பித்ராவை நிறைவேற்றி உள்ளோம், இறைவனிடம் அனைவரின் நலத்திற்கும் வளமான , அமைதியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்திதோம், இன்றைய தினத்தை குடும்பத்தினர், நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாட இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கூறினார்கள்.
மேலும் ரம்ஜான் கொண்டாடும் முஸ்ஸீம் நண்பர்களுக்கு வாழ்த்து கூறும் நிகழ்வு நடந்தது. கவுரவ தலைவர் ஏஆர்.நூர்முகமது
தலைமை வகித்தார். தலைவர் ரா.சம்பத்குமார்,ஜெ.ராஜாமுகமது,சவரிமுத்து, வர்த்தக கழக பொருளாளர்கதிரேசன், வழக்கறிஞர் சந்திரசேகரன்,ராமுக்கண்ணு,அஷ்ரப்அலி , திருநாவுக்கரசு,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெருநாள்தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்று வாழ்த்து கூறினர். அனைவரையும் பைதுல்கமிட்டி தலைவர் எம்.லியாகத்அலி வரவேற்றார்.எம்.எல்.ஏ. வை.முத்துராஜா பங்கேற்று வாழ்த்தினார்.