புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் கடை வீதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கவியரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கவியரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கவியரங்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பலத்த மழை பெய்தது. அனைத்து பொதுமக்களும் கலைந்து சென்ற வேளையில் மேடையில்
இருந்த அமைச்சர் மெய்யநாதன் கவிஞர்கள் பேச்சை நிறுத்த விடாமல் கொட்டும் மழையில் அவர்களுக்கு குடை பிடித்து பேச வைத்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் மேடையில் குடை பிடித்தவாறு கவிஞர்களின் பேச்சை கேட்டு ரசித்தனர். கருணாநிதி நூற்றாண்டு விழா கவியரங்கில் அமைச்சர் மெய்யநாதன் கவிஞர்களுக்கு கொட்டும் மழையில் குடை பிடித்து பேசவைத்த சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.