புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திருமயம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த இரண்டரை வருடமாக உடல்நிலை சரியில்லாமல் ஒரு முதியவர் தங்கியிருந்தார். அவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் அந்த வழியாக வருகிறவர்கள் செய்கிற உதவியைக்கொண்டு அவர் ஜீவனம் செய்து வந்தார். மிகவும் அழுக்கடைந்த உடையுடன், தாடி மீசையுடன் காணப்பட்டார்.
இதை அறிந்த மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, அந்த முதியவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கா . வைரம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரேவதி, மெய்யம்மாள் ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்று அனுமதித்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எஸ்.பி. வந்திதா பாண்டே மற்றும் எஸ்.ஐ. வைரம் குழுவினரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.