புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஒரு ஐஸ் பேக்டரி செயல்படகிறது. தற்போது அந்த பேக்டரியில் சோலார் பிளாண்ட் அமைத்துள்ளார். எனவே புதிய மின் மீட்டர் பொருத்த வேண்டும் என்பதற்காக பேக்டரி மேலாளர் நாராயணசாமி மின்வாரியத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது நாகுடி மின்வாரிய உதவி கோட்டப்பொறியாளர் பிருந்தாவனன் , ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்தால், தான், மீட்டர் பொருத்தி தரமுடியும் என்று கூறியதாக தொிகிறது. அவ்வளவு பெரிய தொகை தங்களால் தரமுடியாது என்ற கூறி உள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.1லட்சத்து 75 ஆயிரம் லஞ்சம் தருவதாக பேசி முடிக்கப்பட்டது.
இந்த தொகையையும் கொடுக்க விரும்பாத நாராயணசாமி இது குறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தாா். போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு நாராயணசாமி, பிருந்தாவனன் இருந்த அலுவலகம் சென்று கொடுத்தாா். அப்போது அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.