புதுக்கோட்டை மாவட்ட காவல் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவரின் உத்தரவுப்படி அனைத்து சாதி சமுதாய மக்களும் சமம் என்பதை வலியுறுத்தி ஒன்றிணைவோம் என்ற கருத்துடன் சமுதாய சமத்துவ விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் காவல் துறை சார்பில் நடந்தது. ஆண்களுக்கான
போட்டியை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரபாகரன் துவக்கி வைத்தார். பெண்கள் பிரிவு போட்டியை புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.ராகவி துவக்கி வைத்தார். மொத்தம் கலந்து கொண்டவர்கள்
ஆண்கள் 60, பெண்கள் 70பேர்கள் பங்கேற்றனர்.