இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 25.05.2023 மாலை 04.00 மணியளவில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து,
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்,மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.