Skip to content
Home » புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலளார் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவடட்டச் செயலளார் எஸ்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி புதுக்கோட்டை மாவட்ட வழங்கறிஞர் சங்கத் தலைவர் வி.டி.சின்னராசு, வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னார மற்றும் நிர்வாகிகள் எம்.வேலுச்சாமி, எஸ்.மணிமொழியன், கே.ஆர்.தர்மராஜன், எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!