புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பாக ஒப்பந்தக்காரர் ஹைவேஸ் பாண்டியிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர் . மேற்கொண்டு போலீசார் இவர் ஒருவர் மட்டும் தானா வேறு நபர்கள் யாரேனும் தொடர்பா என்பதுகுறித்தும் கொலைக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்.
