புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கத்தின் மூலமாக தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் முழுமைக்கும் ஐந்து லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து கிலோ வாட் சூரிய மின்சார திட்ட சாதனங்களை
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் மாணவர்சங்கதலைவர்ரா.சம்பத்குமார், கவுன்சிலர் சுப.சரவணன், முன்னாள் மாணவர் வழக்கறிஞர் சந்திரசேகரன்,நகர்மன்ற துணைத்தலைவர் எம்.லியாகத்அலி,கல்லூரி முதல்வர் சி.திருச்செல்வம், பேராசிரியர்கள் எஸ்.கணேசன், ஆர்ஜீவானந்தம், முன்னாள் மாணவர் சையது முகம்மது உள்பட பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் கள் பங்கேற்றனர்.