புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சியாக உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, மாநகராட்சியையும் தொடங்கியும் வைத்தார்.
இதன் மூலம் புதுக்கோட்டை நகராட்சி தலைவராக இருந்த திலகவதி செந்தில் முதல் மேயராகவும், துணைத்தலைவராக இருந்த எம். லியாகத் அலி முதல் துணை மேயராகவும் அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து முதல் மேயர், துணை மேயர் ஆகியோர் கலெக்டர் மு. அருணாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இருவரும் கலெக்டருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு வழங்கினர்.