Skip to content
Home » மூளைச்சாவு…….புதுகை பெண் உடல் உறுப்புகள் தானம்….. 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

மூளைச்சாவு…….புதுகை பெண் உடல் உறுப்புகள் தானம்….. 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

புதுக்கோட்டை மாவட்டம் செட்டியாபட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி, விவசாயி. இவரது  மனைவி மாரிக்கண்ணு(45). இவர் கடந்த 7ம்தேதி சமயபுரம் பாதயாத்திரை புறப்பட்டார். கீரனூர் அருகே  சென்றபோது  தாறுமாறான வேகத்தில் வந்த  இருசக்கர வாகனம் மாரிக்கண்ணு மீது மோதி தூக்கி வீசியது. இதில்  அவர்  தலையில் பலத்த காயமடைந்தார்.  உடனடியாக அவரை  புதுக்கோட்டை  அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும்  இன்று (வெள்ளி) அவருக்கு  மூளைச்சாவு ஏற்படது.

இதனை தொடர்ந்து  மாரிக்கண்ணுவின்  உடல் உறுப்புகளை மருத்துவகல்லூரி
மருத்துவமனைக்கு தானமாக வழங்க  ரெங்கசாமியும், அவரது இரு மகள்களும் ஒப்புதல் அளித்தனர். இதனை யடுத்து அவரது உடல் உறுப்புகள் நுரையீரல்,கல்லீரல்,இருசிறுநீரகங்கள்,கண்கள் தானமாக பெறப்பட்டது. இந்த
உடல்உறுப்புகள் 6பேர்களின் உடல்களில் பொருத்த  திருச்சி, உள்பட பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாரிக்கண்ணு மரித்தாலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

இதற்காக மூளைச்சாவு ஏற்பட்ட மாரிக்கண்ணு குடும்பத்தினருக்கு
மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர் ஜிஏ.ராஜ்மோகன் நன்றி தெரிவித்தார்.மேலும்
மருத்துவகல்லூரி நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர்
டாக்டர் தெய்வநாயகி, நிலைய  மருத்துவர் ஏ.இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *