Skip to content

புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

  • by Authour

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்ற ஸ்கேன் மூலம் கண்டறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே திருட்டுத்தனமாக  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து  தெரிவித்து வருகிறார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதியில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான்விடுதி என்ற கிராமத்தை சேர்ந்தவர்  பரிமளேஸ்வரன், விவசாயி. இவரது மனைவி  கலைமணி(31). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள்

உள்ள நிலையில் 3வதாக அவர் கர்ப்பம் ஆனார்.

பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று கலைமணி  ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் பெண் குழந்தை இருப்பதாக மருத்துவமனையில் கூறிவிட்டனர். ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும்  பெண்ணா என அதிர்ச்சி அடைந்த அந்த  பெண்ணும், அவரது குடும்பத்தாரும் கருவை கலைக்கும்படி கூறினார்களாம்.

அதே ஆஸ்பத்திரியில்  நேற்று 5 மாத கர்ப்பிணியான  கலைமணிக்கு கருவை கலைத்தனர். இன்று காலை அந்த பெண்  இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு  சாலை மறியல் செய்தனர்.  ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.  போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கும்  கலைமணியின் உறவினர்கள் திரண்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!