தை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. பின்னர் கடலில் புனித நீராடி ராமநாத ராமநாத சுவாமி கோவிலில் அபிஷேக ஆராதனை செய்து முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதேபோன்று மணமேல்குடி அருகே உள்ள
கோடியக்கரை புனித நீராட சிறந்த இடமாகும். இந்த கடற்கரையில் புனித நீராடிய பிறகு இங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபடுவது வழக்கமாகும். அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் பல்லவன் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஸ்ரீ சாந்தநாதரை வழிபட்டனர்.