கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையினால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4,321 குடும்பங்களைச் சேர்ந்த 6,601 ஆண்களும் 7,108 பெண்களும் 1,129 குழந்தைகள் என மொத்தம் 15,712 நபர்கள் மீட்கப்பட்டு 35 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி
ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் இன்று காலை காலை 07:30 மணியளவில், கன மழையினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கான நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை அனுப்பி வைத்தார்.