தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 730 காளைகளும் 297 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிகட்டு 5 சுற்றுகலாக நடைபெறவுள்ளது. வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சைக்கிள் எல் இ டி டிவி சில்வர் பாத்திரங்கள் பேன் மிக்ஸி குக்கர் வெள்ளி காசு தங்க காசு ரொக்க பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் அமர கேலரி வசதி செய்யப்பட்டது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.