புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கழக மாநில விவசாய தொழிலாளர்அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,
புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர்
அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு ,புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்பட பலர் உள்ளனர்.