புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,அரிமழம் அரசு மருத்துவ நிலையம் ,ஓணாங்குடி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியது.ஊராட்சிமன்ற மன்ற தலைவர் கேஆர்.முருகேசன் தலைமை வகித்தார். அரிமழம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலாமுத்து முகாமை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணராஜா,ஊராட்சி துணைத்தலைவர் அண்ணாமலை, ஊர்அம்பலம் சரவணன், ஊராட்சி செயலர் செல்வம், ஆசிரியர் சோமு,மக்கள்நல பணியாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார முதன்மை கண்மருத்துவர் எஸ்.புவனேஸ்வரி தலைமையில் கண்மருத்துவ குழுவினர் கண்பரிசோதனை நடத்தி உரிய ஆலோசனைகளை வழங்கினர்