Skip to content
Home » இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

  • by Senthil

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து  மனநல சிகிச்சையில் குணமடைந்த மகாராஷ்டிரா பெண்ணை சமூக வலைத்தள பதிவின் உதவியுடன் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்த மருத்துவருக்கு  பாராட்டு குவிந்து வருகிறது.

மகாராஷ்டிராவை சேர்ந்த சல்மா ஜவர்கான் என்பவர் கடந்த இரண்டரை  ஆண்டுகளுக்கு முன் தவறுதலாக மாற்று ரயிலில் ஏறி தமிழ்நாடு வந்து சேர்ந்தார். புதுக்கோட்டையில் தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் மனிதாபமற்ற முறையில் அடைத்து வைத்த பெண்களை அரசு மீட்டபோது சல்மாவும் அதில் இருந்து மீட்கப்பட்டு  புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய திடீர் ஆய்வினைத் தொடர்ந்து  சல்மா மீட்கப்பட்டார்.  அவருக்கு சிறப்பாக  அளிக்கப்பட்ட மனநல சிகிச்சையில் அவர் குணமும் அடைந்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் பிரமிளா என்பவர் இந்தி மட்டுமே தெரிந்த சல்மாவிடம் பேசி அவரை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். பிரமிளாவின் நண்பர்கள் அந்த பதிவை மகாராஷ்டிராவில் வைரலாக்கினர்.

மகாராஷ்டிராவில்  சல்மாவின் உறவினர்களும் இந்த வீடியோவை பார்த்து  நெகிழ்ச்சியடைந்தனர். இறந்து விட்டார் என கருதப்பட்ட சல்மா உயிருடன் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் நேரில் வந்து அவரை அழைத்து சென்றனர்.  சல்மாவை தங்களுக்கு கண்டுபிடித்து கொடுத்த மருத்துவர்  பிரமிளாவுக்கு, சல்மாவின் கணவர் மற்றும் 2 மகன்கள் நன்றி தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும்  டாக்டர் பிரமிளாவை பாராட்டி வரும் நிலையில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா நேரில் சென்று சால்வை அணிவித்து புத்தகமும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!