புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க அதிகாரியாக செந்தில் என்பவர் சமீபத்தில் பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற நாள் முதல் விளையாட்டு அரங்கில் நடைபயற்சி மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பல்வேறு வகையில தொல்லை கொடுத்து வருகிறார். கடந்த 5 நாட்களாக விளையாட்டு மைதானத்திற்குள் எந்த விதமான வாகனங்களும் வரக்கூடாது என்று கூறி விளையாட்டு மைதானத்தின் நுழைவாயில் உள்ள கதவை இரும்புச் சங்கிலியால் பூட்டிவிட்டார். இதனால் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நுழைய முடியாத இருசக்கர வாகன ஓட்டிகள் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு நடைபயற்சி மேற்கொண்டனர். மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு செல்ல முடியாமல் வெளிப்புறங்களில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி
வருகின்றனர். இன்று மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்திலின் அராஜ போக்கை கண்டித்து, நடைபயற்சி மேற்கொள்ளும் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் செந்திலின் அராஜகத்தை கண்டித்து கோஷங்கள். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், அரசு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் அசோக், ராமலிங்கம், ராதாகிருஷ்ணன், ராமநாதன், நடைபாதை சங்க தலைவர் பக்கிரிசாமி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், திரளான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.