புதுக்கோட்டை மாவட்டமைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் த.ரேவதி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.ராமலிங்கம்சாதனைப்பெண்களான பொருளாதாரகுற்றப்பிரிவு .எஸ்.பி.லில்லிகிரேஷ்,புதுக்கோட்டை
நகராட்சி தலைவி திலகவதி செந்தில் ,ஆசிரியர் ஞா.அமலா, தேசிய குத்துச்சண்டை வீராங்கனை இர.மாலதி, நூலகர் சசிகலா உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் தங்கம்மூர்த்தி,
கவிஞர் அஞ்சலி தேவிதங்கமூர்த்தி, கவிஞர் மைதிலி கஸ்தூரி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.