Skip to content

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,  சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (29.05.2023) திறந்து வைத்தார். மேலும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களையும் அமைச்சர்  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத், வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி மீன்பிடி இறங்கு தளத்தினை,  மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் இன்று (29.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர்  பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் (பொ)  சிவக்குமார், துணை இயக்குநர் (மீன்வளம்)  ரெ.சர்மிளா, உதவி இயக்குநர் (மீன்வளம்)  சின்னகுப்பன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!