புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும்
சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் பிரச்னை ஏற்படும், அதுபோன்ற புகார்கள் எந்தெந்த பகுதிகளில் இருந்து வந்துள்ளது. அந்த பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டார். எந்த பகுதியிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு வரக்கூடாது. உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோடை மழை அதிகமாக பெய்ததால் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது) முருகேசன் , உதவி இயக்குனர்( ஊராட்சி கள்)எஸ்.ஜி. சீனிவாசன் , செயற் பொறியாளர் (த.கு.வ.வா.) த.அய்யாச்சாமி, நகராட்சி ஆணையர்புதுக்கோட்டை, அறந்தாங்கி (பொ) ஷியாமளா , மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.