புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் சகோதரரும்,புதுக்கோட்டை மாவட்ட ரஜனி மன்ற அமைப்பாளருமான தொழிலதிபர் கே.கே.முருகுபாண்டியன் அ.திமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிச்சாமிஅவர்களை சந்தித்து அ.திமுகவில் இணைந்தார்.
பின்னர் புதுக்கோட்டைமாவட்ட அ.திமுகசெயலாளரும், முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான சி.விஜபாஸ்கர் அவர்களுக்கு சால்வை அணிவித்துவாழ்த்துப்பெற்றார்.
கே.கே.செல்லபாண்டியனின் மூத்த சகோததரர் கே.கே.அன்புச்செல்வன் திமுகவில் ஏற்கனவே பல்வேறுபொறுப்புக்களை வகித்து வந்த நிலையில் அவர் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/புதுக்கோட்டை-720x620.jpg)