புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மஞ்சுளா (49). இவர தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தங்கி வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது கைப்பையை ஒரு அறையில் வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து கைப்பையை திறந்து பார்த்த போது அதில் தான் வைத்திருந்த 5 பவுன் நகைகளை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…
- by Authour