தமிழ்நாடு முதலமைச்சர் , பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.03.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், தேக்காட்டூர் கிராமம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்களும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும், மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (யுவுஆ ஊயசன) வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாநிலங்களவை உறுப்பினர் .எம்.எம்.அப்துல்லா அவர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .எம்.சின்னத்துரை , முள்ளாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய்
அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி.திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மேகலாமுத்து (அரிமயம்), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்பது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணர், வட்டாட்சியர் விஸ்வநாதன், உள்ளாட்சி அமைப்புகளிள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.