Skip to content

பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை கலெக்டர் அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினார்.  முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ.10,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000/- மும் என ஆகமொத்தம் ரூ.1,32,000/- மதிப்பிலான காசோலைகளும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் கலெக்டர் வழங்கினார்.

இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ள மாணாக்கர்கள் 28.01.2025 அன்று சென்னையில் நடத்தப்பெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறுவர் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்மு.அருணாதெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) .ச.சீதாலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .உலகநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.