புதுக்கோட்டை நகராட்சி சில மாதங்களுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி தலைவராக இருந்த திலகவதி செந்தில் மேயராக அறிவிக்கப்பட்டார். இதையொட்டி இன்று புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சியின் முதல் கூட்டம் நடந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாமன்ற முதல் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு , சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி
ஆகியோர் ஆகியோர் கூட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.
முதல் மேயர் திலகவதி செந்தில், மேயருக்கான அங்கி அணிந்து கூட்டத்தில் பங்கே்றறார். அவருக்கு அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் ஆகியோர் வெள்ளி செங்கோல் வழங்கினர். அதைத்தொடர்ந்து மேயர் திலகவதி செந்தில் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), .எம்.சின்னத்துரை அவர்கள் (கந்தர்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லப்பாண்டியன் , நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் .தானமூர்த்தி, புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் .எம்.லியாகத் அலி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர திமுக செயலாளர் செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட மேயருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.