தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பதில் அளித்தார். புதுக்கோட்டைக்கு தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.642 கோடியில் புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப அந்த திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்ததாக மாநகராட்சி ஆக்குவது குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அமைச்சர் நேரு கூறினார்.