தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மருதன்கோன்விடுதி மாணவியர் விடுதியில் குத்துவிளக்கேற்றினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், கல்லூரி முதல்வர் சந்திரவதனம், செயற்பொறியாளர் (தாட்கோ) பி.வெங்கடேசன், மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவவர்கள் உள்ளனர்
புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…
- by Authour
