தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (23.09.2024) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உளாவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், சுலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், சேமிப்புக் கிடங்கு வளாகங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள். இதில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், பொன்னன்விடுதி, ஆவுடையார்கோவில் வட்டம், சிறுமருதூர், மணமேல்குடி வட்டம், நெற்குப்பை ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, கறம்பக்குடி வட்டம், பொன்னள்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா கலந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் எம்.சீதாராமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.