புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் அருணா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசின் உத்தரவுப்படி சரியான ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார்.
இங்கிருந்து கடையாத்திப்பட்டியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் நெல் மூட்டைகள் எடுத்து செல்லப்படுவதையும் கலெக்டர் அருணா ஆய்வு செய்தார். அப்போது வேளாண்துறை அதிகாரிகள், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.