புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சத்துள்ளதாகவும் இருக்கவேண்டும். அதே நேரத்தில் சுகதாரமான முறையில் குழந்தைகளுக்கு தயாரித்து வழங்க வேண்டும் என்றும் அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் சித்தன்ன வாசல் அடுத்த பனம்பட்டியில் நடந்த பேரிடம் மேலாண்மை மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி,
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.