புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சுனையக்காடு ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ 34.88
லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு முதல் கரம்பக்காடு மாயான சாலை வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையின்
தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் , மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பரமசிவம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.