தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சென்னையில்புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமா ராமநாதன் (எ) இரா.ராமநாதனுக்கு தமிழ்ச்செம்மல் விருது, விருதுத்தொகை ரூ.25,000/- மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கினார். அதனை ராமநாதன் இன்று கலெக்டர் அருணாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமியும் உடன் இருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று கலெக்டர் அருணா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினர். மனு கொடுக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த கலெக்டர் அருணா அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அங்கேயே மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.