Skip to content
Home » மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து,  இறப்பு நிவாரண உதவிகளை சம்பந்தப்பட்டவர்களின்  குடும்பத்திற்கு கலெக்டர் வழங்கினார். கொடிநாள் வசூல் இலக்கினை முழுமையாக அடைந்தவர்களுக்கு சான்றிதழ்,  மற்றும்  பயனாளிகளுக்கு கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல்,  தனித்துணை ஆட்சியர் ஷோபா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி உலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!