மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், காரில் பயணித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
