புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாவட்ட கலெக்டர் மு.அருணா, தலைமையில் இன்று (24.08.2024) வழங்கினார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொது) முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு குழுத் தலைவர் . ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.