புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (27.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் க.குணசேகரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.