புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது வரலாற்று சிறப்புமிக்க பல தொல்லியல் பொருட்களை உள்ளடக்கிய புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் தினசரி பார்வையாளர்கள் அதிகரிக்கிறதா, சரியான முறையில் தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் மேலும் இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த என்னென்ன பணிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் காப்பாட்சியர் பொறுப்பு வகிக்கும் பக்கிரிசாமியிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது உடன் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், வரலாற்றுதுறை பேராசிரியர் சா.விஸ்வநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, கனகம்மன்பாபு , நிசாம், பகுதி திமுக நிர்வாகிகள் ரங்கராஜ், கணேசன், சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர்.