கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை ஒழிக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.திமுக செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை நகரக் கழகச் செயலாளர்கள் எஸ் ஏ. சேட்டு என்று அப்துல் ரஹ்மான் பாஸ்கர். அன்னவாசல் நகர செயலாளர் அப்துல் அலி ,இலுப்பூர் நகரச் செயலாளர் சத்யா மணி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நார்த்தாமலை ஆறுமுகம். குளத்தூர் ராசு. ஒன்றிய கழகச் செயலாளர் முத்தமிழ்செல்வன், பேரூராட்சி மன்ற தலைவர் சாலை மதுரம் ,எம் சி சேதுராமன் மாவட்ட . மாணவரணி துணைச் செயலாளர். ஆனந்தன் மாவட்ட விவசாய துணை செயலாளர் முத்துக்குமார் . ஒன்றிய கவுன்சிலர்கள் செல்லதுரை துரை ,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் குருபாபு.மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அதிகப்படியான நெருக்கடியை கொடுத்துள்ளதுதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கூட கள்ளச்சாரய சாவுகளுக்கு சிபிஐ விசாரணைக்கு வேண்டுமென திமுக கோரி உள்ளது
விஷ சாராயம் அருந்தியவர்களுக்கு மெத்தனால் விஷமுறிவு மருந்து போதிய அளவு கொடுக்கப்படவில்லை அந்த மருந்து இருப்பும் வைக்கப்படவில்லை அதனால் உயிரிழப்புகள் அதிகமானதுவிஷ சாராய சம்பவம் நடந்த மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.