புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மலைக்கு டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சொத்து வரிஉயர்வு, மின்சாரம்,பால் ஆகியவற்றின் விலை உயர்வைக்கண்டித்து முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தலைவர் ராமசாமி,ஒன்றிய செயலாளர் கள் சாம்பசிவம்,முத்தமிழ்செல்வன், அன்னவாசல் பேரூர் கழக செயலாளர் அப்துல்அலி, அன்னவாசல் பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மாள் உள்பட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.