புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் வடக்கு ஒன்றியத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருமயம் வடக்கு ஒன்றியம் சார்பில் ராங்கியம்,குழிபிறை,பனையபட்டி ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் திமுக தலைமை
கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் சிறப்புரையாற்றினார்.இதில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன்,குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.