திருச்சி, திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகபணியாற்றியவர்பிரியா வயது45. இவர் 7ந்தேதிஇரவுபணியைமுடித்து புதுக்கோட்டை க்கு தனது ஊருக்குசெல்வதற்காக பஸ்ஸில் வந்தவர் . புதுக்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து தனது கணவர் சிவக்குமாருடன் டூவீலரில் மேட்டுப்பட்டி யில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றபோது புதுக்கோட்டை பெரிய ஆஸ்பத்திரி பகுதியில் புதிதாக போடப்பட்டு இருந்த வேகத்தடை தெரியாமல் டூவீலரில் இருந்து பிரியா தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக திருச்சி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். பிரேத விசாரணை க்கு பின்னர் பிரியா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு 9ந்தேதி
இரவு பிரியா உடல் வந்தடைந்தது. அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே பிரியா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரியா உடலை சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார். அங்கு காவல்துறையினரின்
மரியாதை யுடன் 21குண்டுகள் முழங்க பிரியா உடல் அடக்கம் செய்யப்பட்டது.