புதுச்சேரி முத்தையால் பேட்டை சோலை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஐந்தாம் வகுப்பு படித்த 9 வயது நிரம்பிய சிறுமி ஆர்த்தி என்பவரை சிலர் கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து கை, கால் கட்டப்பட்ட நிலையில் கொன்று சாக்கு முட்டையில் கட்டி கூவத்தில் தூக்கி எறிந்த அவல நிலை புதுச்சேரியில் நடந்தேறியது இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டுமென ஒற்றை கோரிக்கையோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து திருவெறும்பூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்டூர் பகுதி செயலாளர் தோழர் சந்தோஷ்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்டூர் பகுதி துணைச் செயலாளர் தோழர் சுபாஷ் தலைமை தாங்கினர். திருச்சி மாநகர மாவட்ட தலைவர் பா.லெனின் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாதர் சங்க பகுதி செயலாளர் மலர், எலிசபெத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் யுவராஜ்,பகுதி நிர்வாகிகள் கவியரசு, தினேஷ், ஹரிஹரன், அஜித்குமார், சண்முகநாதன்,துரை,ஹரி, ஆல்பர்ட், அரவிந்த், லோகு, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்