முழு முதற்கடவுள் விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இதனையொட்டி புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயயத்தில் சங்கடஹர
சதுர்த்தி அனுசரிக்கப்பட்டது. பால், தயிர், பழங்கள், தேன், இளநீர், சந்தனம், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் வரசித்தி விநாயகர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து விநாயகர் அவல் பாடி பக்தர்கள் பிரசாதம் பெற்று , விநாயகரை வழிபட்டு சென்றனர்.