புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புதுச்சேரியில் விற்கப்பட்ட ரோஸ் நில பஞ்சு மிட்டாயில் ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப்பொருள் இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாயில் கலப்படம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும் இதுபோல் ஆய்வு செய்து கலப்பட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.