புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடவாளம் ஊராட்சிதெற்கு செட்டியாபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் அமைத்து அதன் சேவையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா
தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில்புதுக்கோட்டை தெற்கு ஒன்றியதிமுக செயலாளர்மு. க. ராமகிருஷ்ணன் ,ஊராட்சி மன்ற தலைவர் அருட்சிறுமலர் ஞானப்பிரகாசம், கவுன்சிலர் கலியமுத்து, கழக நிர்வாகிகள் வடவாளம் மணிமாறன், லாசர், மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.