புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான செந்தில்(50) இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 1ம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
தகவல் அறிந்ததும் அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், எம்.எல்.ஏக்கள் சின்னதுரை, முத்துராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், ராமசுப்புராம், முன்னாள் நகராட்சித் தலைவர் துரை திவ்யநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் செந்தில் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செந்தில் உடல் இறுதிச்சடங்கு புதுக்கோட்டையில் நாளை நடக்கிறது.